புரட்சித்தலைவர் வில்லன்…இவர் ஹீரோ …இருவருக்கும் பிரம்மாண்டமான வாள் சண்டை…அப்பா…எப்படியிருக்கும்? கமல், ரஜினி, மாதவன் இவர்களுக்கே முன்னோடியாக இருந்தவர் தான் இந்த பழம்பெரும் நடிகர்…! ரஞ்சன் பாடகர், நடனக்கலைஞர், வில்வித்தையில் திறமைசாலி, வாள்வீச்சு வீரர், நாடகக்கலைஞர், ஓவியர், கிரிக்கெட் வீரர் , குதிரை சவாரியில் வல்லவர், நீச்சல் வீரர் அதுமட்டுமா…தமிழ் சினிமாவுக்கு வந்த முதல் எம்ஏ பட்டதாரியும் இவர் தான். Ranjan இன்னும் சொலல்லப்போனால் பத்திரிகையாளர், மேஜிக் நிபுணர், எழுத்தாளர்…அடேங்கப்பா ஒரு மனுஷனுக்குள்ள இவ்ளோ திறமையா? என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். கமல், ரஜினி, மாதவன் இவர்கள் எல்லாம் பாலிவுட்டில் படங்கள் நடித்தாலும் விரல் விட்டும் எண்ணும் அளவில் தான் நடித்தனர். ஆனால் இவர்களுக்கு முன்பே பாலிவுட்டில் 10க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார் ரஞ்சன். தமிழ்சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோவே இவர் தான். மேலும் படங்களில் வில்லனுக்கும் நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியவரும் இவர் தான். தனக்கென்று தனி ஸ்டைல், மேனரிஸம் என்று ரசிகர்களைத் தன் பக்கம் இழுத்து வசூல் சக்கரவர்த்திய...