Posts

Showing posts with the label #bala

இயக்குனர் பாலா விவாகரத்து!

Image
இயக்குனர் பாலா விவாகரத்து! தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா.'சேது', 'நந்தா', 'பிதாமகன்' தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத மனிதர்களின் வாழ்க்கையைச் சுற்றியே அவரது கதைக்களம் அமைந்திருக்கிறது.  இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்ளிட்ட நடிகர்களை மெருகேற்றியவர் இயக்குநர் பாலாதான். தற்போது மீண்டும் பாலா - சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. 'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு பாலா - சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (5.3.2022) இருவரு...