மார்ச்.27 முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி... கொரோனா குறைந்ததால் தடை நீக்கம்!!
மார்ச்.27 முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி... கொரோனா குறைந்ததால் தடை நீக்கம்!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கிய இந்த வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டதோடு உயிரிழப்புகள் அதிகரித்தது. இதன் காரணமாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கடைகள், சுற்றுளாதளங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனிடையே வெளி நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து, அனைத்து விமான சேவைகள...