Posts

Showing posts with the label #Dhanush #Maran

ஓடிடியில் இன்று மாலை வெளியாகும் தனுஷின் ‘மாறன்’

Image
ஓடிடியில் இன்று மாலை வெளியாகும் தனுஷின் ‘மாறன்’ கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இப்படத்தில், முதல் முறையாக ஊடகத்துறையைச் சேர்ந்தவராக நடித்திருக்கிறார் தனுஷ். சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருக்கும் இப்படத்திற்கு விவேகானந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மாறன்’ மார்ச் 11 இன்று வெளியாகிறது என்று படக்குழு அறிவித்ததால் அதிகாலை 12 மணிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது. இதனால், ஏமாற்றமுடன் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே, தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ நெட்ஃப்ளிக்ஸில் மதியம் 18 மணிக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.