Posts

Showing posts with the label #school #exam

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு!

Image
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு! கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு - மே 5 முதல் 28 வரை, 11ம் வகுப்பு தேர்வு - மே 9 முதல் 31 வரை, 10ம் வகுப்பு தேர்வு - மே 6 முதல் 30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விரும்பும் தேர்வர்கள் விண்ணப்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்குரிய விண்ணப்பங்களை வருகின்ற 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக காலை 10 மணி முதல் 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று அல்லது இணையதளம் மூலமாக விண்ணப்பத்தினை www....