நர்சிங் & இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு JIPMER-யில் வேலை; இன்று முதல் அப்ளை பண்ணலாம்!
நர்சிங் & இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு JIPMER-யில் வேலை; இன்று முதல் அப்ளை பண்ணலாம்! ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), NTTC-யில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நர்சிங் அதிகாரி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர், இளநிலை நிர்வாக உதவியாளர் மற்றும் பிற பணியிடங்களுக்கு என மொத்தம் 143 பணியிடங்கள் நிரப்படும். இப்பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை இன்று (மார்ச் 10) முதல் தொடங்கியுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 30 ஆகும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் JIMPER இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jipmer.edu.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 11 முதல் ஜிம்பர் இணையதளத்தில் கிடைக்கும். இது குறித்த தகவலுக்கு விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாக படிக்கவும். தேர்வு அட்டவணை: நர்சிங் ஆபீசர் ஜூனியர் இன்ஜினியர் (சிவில்), ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்), டென்டல் மெ...