ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்..! போனின் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா…?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்..! போனின் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா…? ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் SE கடந்த 2016-ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு, SE 2 மாடல் அறிமுகமாகி இருந்தது. தற்போது ஐபோன் SE 2022 மாடல் வெளியாக உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், 4.7 இன்ச் டிஸ்பிளே, 12 மெகாபிக்சல் ரியர் கேமரா, 7 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256 ஜிபி என மூன்று வேரியண்டுகள், SE கேட்டகிரியில் முதல் 5ஜி போன் இது. இந்த மாடல் போனானது மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. வரும் 18-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ள நிலையில், இந்த போனின் ஆரம்ப விலை 43,900 ரூபாய் என கூறப்படுகிறது.