அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா இன்று ஆஜராகிறார்?
அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா இன்று ஆஜராகிறார்? சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, சிறையிலிருந்தபோது சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு 24-வது பெருநகர நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயண்பட் முன்னிலையில் இன்று நடைபெற உள்ளது. சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் இன்று விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.