பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வெடித்த மக்கள் புரட்சி?
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வெடித்த மக்கள் புரட்சி? பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. அக்கட்சியே தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த கெஜ்ரிவால், புரட்சி செய்த பஞ்சாப் மக்களுக்கு நன்றி என குறிப்பிட்டார். மேலும் பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆம் ஆத்மி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் நடைபெறாது என்றும் பகத் சிங் பிறந்த கட்கர் காலன் கிராமத்தில் நடைபெறும் என பகவந்த் மான் குறிப்பிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 2017-ம் ஆண்டு கிடைத்த 312 சீட்கள் தற்போது 260 ஆக க...