பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வெடித்த மக்கள் புரட்சி?


பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வெடித்த மக்கள் புரட்சி?


பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. அக்கட்சியே தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. 

இந்த நிலையில்  டெல்லியில் உள்ள  அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த கெஜ்ரிவால், புரட்சி செய்த பஞ்சாப் மக்களுக்கு நன்றி என குறிப்பிட்டார். மேலும் பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ஆம் ஆத்மி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றம்  நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் நடைபெறாது என்றும் பகத் சிங் பிறந்த கட்கர் காலன் கிராமத்தில் நடைபெறும் என பகவந்த் மான் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 2017-ம் ஆண்டு கிடைத்த 312  சீட்கள் தற்போது 260 ஆக குறைந்து இருப்பது அந்த கட்சிக்கு மாநிலத்தில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளதை நிரூபணம் செய்வதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 384 இடங்களில் போட்டியிட்டு 312 இடங்களில் வாகை சூடியது .அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 311 இடங்களில் போட்டியிட்டு 47 இடங்களை மட்டும்  பிடித்தது.காங்கிரஸ் 114 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

ஆனால்  தற்போது நடைபெற்ற பேரவை தேர்தலில் பாரதிய ஜனதாவால் ஏற்கனவே இருந்த 312 இடங்களை பிடிக்க முடியவில்லை 250 முதல் 260-க்குள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. ஆனால் கடந்தமுறை 47 இடங்களை வென்ற சமாஜ்வாடி கட்சி இந்த முறை 130-க்கும் மேலான இடங்களில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வந்தது. இதனால் இந்த தேர்தலில் வாக்கு விகிதத்தில்  சமாஜ்வாடி கட்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.  உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வாக்கு வங்கி குறைந்து போக காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் விவசாயிகள் போராட்டம், குடியுரிமை சட்டம் உள்ளிட்ட அம்சங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது. 

இதே வேளையில்  பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை பிடித்து இந்தியர்கள் யோசிக்க வைத்து இருப்பதும் இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை காங்கிரஸ், 1சிரோன்மணி அகாலிதள் மட்டுமே ஆட்சி செய்து வந்த பஞ்சாபில் தற்போது புதிய புரட்சிக்கு வித்திட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

இதே நிலை நீடித்தால் பஞ்சாபை தொடர்ந்து பல வட மாநிலங்களையும் ஆம் ஆத்மி கைப்பற்றக்கூடும் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆம் ஆத்மியின் வரலாற்று பயணத்தை தடுக்க காங்கிரஸ் பாரதிய ஜனதாவால் முடியுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

கோவாவில் பெரும்பான்மை தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ள போதிலும், ஆட்சியமைப்பதற்கான நெம்பர் கிடைக்கவில்லை.

40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு, கடந்த 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்ற காங்கிரஸ் கூட்டணி, பின்னர் பின்னடைவை சந்தித்தது. பிற்பகல் நிலவரப்படி, காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  சங்கேலிம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றுள்ளார். 

பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை என்பதால், சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க 3 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக வேட்பாளரை எதிர்த்து  தனித்து  சுயேட்சையாக களம் இறங்கிய மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் தோல்வியை தழுவியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

36 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியும் ஆட்சி அமைக்கலாம் என்ற சூழலில், இந்த மேஜிக் நம்பருக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று  எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ், பா.ஜ.  க இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் பாஜகவின் கை ஓங்கிய நிலையில், அதிக தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால், அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. அங்கு பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்குமுனை போட்டி நிலவியது. உபி.யில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக ஈடுபட்டது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் சமாஜ்வாதி கட்சி உள்ளது.  பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 200-க்கு அதிகமான பாஜக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் முதல்முறையாக ஆட்சியை பிடிக்கிறது.

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு, கடந்த 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக என பலமுனை போட்டி நிலவிய இத்தேர்தலில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.  90 இடங்களுக்கு  மேல் ஆம் ஆத்மி கட்சி  முன்னிலை வகிப்பதாக அங்கு  ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 

துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் சிங் மான் அமோக  வெற்றி பெற்றுள்ளார்.   இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் மட்டும் முன்னிரை வகித்து   2-வது இடத்தில; உள்ளது. 

சாம்கவுர் சாஹிப், படாவூர் ஆகிய இருதொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்  சரண்ஜித் சிங் சன்னி, இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அம்ரீந்தர் சிங் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

இதேபோல், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப் காங்கிரஸ் கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தோல்வியை தழுவியுள்ளார்.

Comments