அம்பேத்கர் மற்றும் பகத் சிங் கனவை நிறைவேற்றுவேம் - ஆம் ஆத்மி உறுதி
அம்பேத்கர் மற்றும் பகத் சிங் கனவை நிறைவேற்றுவேம் - ஆம் ஆத்மி உறுதி பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோர் டெல்லியில் உள்ள தனது தொண்டர்களிடம் உரையாற்றினார். அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரை முன்னிறுத்தி பஞ்சாப் தேர்தலை ஆம் ஆத்மி எதிர்கொண்டது. இந்நிலையில், தேர்தல் வெற்றிகுறித்து டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா பேசுகையில், அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் கனவை நிறைவேற்றும் வாய்ப்பு ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளது. மாற்றத்திற்கு பஞ்சாப் மக்கள் வழிவகுத்துள்ளனர் என்றார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், மாபெரும் புரட்சியை பஞ்சாப் மாநிலம் செய்துள்ளது. மற்றக் கட்சியைச் சேர்ந்த பெரும் தலைவர்களான சுக்பிர் பாதல், பிரகாஷ் பாதல், அமிரீந்தர் சிங், சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, பிக்ரம் சிங் மதிஜா என பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். பஞ்சாப் மக்களுக்கு ஆம் ஆத்மி மாற்றத்தை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.