Posts

Showing posts with the label #Comedian | #Punjab | #Minister | #Bhagwant

காமெடி நடிகர் டூ பஞ்சாப் முதலமைச்சர் – யார் இந்த பகவந்த் மான்?

Image
காமெடி நடிகர் டூ பஞ்சாப் முதலமைச்சர் – யார் இந்த பகவந்த் மான்? பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நாட்டிலேயே முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளரை சற்று வித்தியாசமான முறையில் தேர்வு செய்தது என்றுதான் கூற வேண்டும். பொதுமக்களிடம் இலவச அலைபேசி எண் அறிவித்து அதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தி பக்வந்த் மான் என்பவரை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். பக்வந்த் மான் பற்றிய தகவல்களை விவரிக்கிறது இந்த கட்டுரை தொகுப்பு. பக்வந்த் மான் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஷீமா மண்டிக்கு அருகில் உள்ள சதோஜ் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை மகிந்தர் சிங் அரசு ஆசிரியர். தாய் ஹர்பால் கெளர். ஆசிரியரின் மகனான இவரை அவரின் தந்தை ஆசிரியராக்கி பார்க்கவேண்டும் என்றே ஆசை பட்டார். ஆனால் மானின் விருப்பம் வேறு மாதிரி இருந்தது. பஞ்சாப் மக்கள் மத்தியில் ஓர் அரசியல்வாதி என்பதை விட, நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் பக்வந்த். கல்லூரி பருவத்தில் இருந்தே ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை மேம்படுத்தி கொண்டவர்.