படிப்பை தொடர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்... சான்றிதழ்கள் உக்ரைனில் சிக்கிவிட்டன - தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை உக்ரைனில் போர் நடப்பதால் இந்திய அரசு, சிறப்பு விமானங்கள் இயக்கி, அங்கிருந்து இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்தது. தமிழகத்திற்கு 11வது நாளாக விமானங்களில் சென்னை, திருச்சி பகுதிகளை சேர்ந்த 4 மாணவ- மாணவிகள் டெல்லியில் இருந்து வந்தனர். சென்னை விமான நிலையம் வந்தவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அதிகாரிகள் வரவேற்றனர். இந்த விமானங்களில், போர் நடக்கும் பகுதியான கார்கிவ் நகரில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்களை கண்டதும் குடும்பத்தினர் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த மாணவி உஷாவின் தந்தை ஐசக் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகள் டாக்டர் படிக்க வேண்டும் என்ற கனவுடன் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்து அனுப்பினேன். 6ஆம் ஆண்டு படிக்கிறார். இன்னும் 2 ம...