நர்சிங் & இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு JIPMER-யில் வேலை; இன்று முதல் அப்ளை பண்ணலாம்!
நர்சிங் & இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு JIPMER-யில் வேலை; இன்று முதல் அப்ளை பண்ணலாம்!
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), NTTC-யில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நர்சிங் அதிகாரி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர், இளநிலை நிர்வாக உதவியாளர் மற்றும் பிற பணியிடங்களுக்கு என மொத்தம் 143 பணியிடங்கள் நிரப்படும். இப்பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை இன்று (மார்ச் 10) முதல் தொடங்கியுள்ளது.
ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 30 ஆகும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் JIMPER இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jipmer.edu.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 11 முதல் ஜிம்பர் இணையதளத்தில் கிடைக்கும். இது குறித்த தகவலுக்கு விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாக படிக்கவும்.
தேர்வு அட்டவணை:
நர்சிங் ஆபீசர் ஜூனியர் இன்ஜினியர் (சிவில்), ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்), டென்டல் மெக்கானிக் ஆகியோருக்கான தேர்வு ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும்.
அனஸ்தீசியா டெக்னீசியன், ஸ்டெனோகிராபர் கிரேடு II மற்றும் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட் ஆகிய பணிகளுக்கான தேர்வு ஏப்ரல் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 முதல் 2 மணி வரை நடைபெறும்.
என்டிடிசியில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கான தேர்வு ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5:30 மணி வரை நடைபெறும்.
காலியிட விவரங்கள்:
143 காலியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் நடத்தப்படுகிறது. அதில் 121 காலியிடங்கள் குரூப் பி பதவிகளுக்கும், 22 காலியிடங்கள் குரூப் சி பதவிகளுக்கும். இது குறித்த மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைபார்வையிடலாம்.
நர்சிங் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பொது நர்சிங் மற்றும் மிட்வைஃபரியில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அதேசமயம், மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட் (எம்எல்டி) பதவிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழுமையான விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
UR மற்றும் EWS பிரிவினருக்கும், OBC பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 1500 ஆகும். SC / ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து PWBD (பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்கள்) க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
ஊதிய விவரம் பதவிகளுக்கு ஏற்றார் போல மாறுபடும். நர்சிங் அதிகாரிக்கு ரூ.44,900, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (எம்எல்டி) ரூ.35,400, ஜேஇ பதவிக்கு ரூ.35,400, என்டிடிசியில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் ரூ.35,400, டெண்டல் மெக்கானிக்குக்கு ரூ.19,900, ஸ்டெனோகிராஃபர் தரம் II பதவிக்கு ரூ. 25,500 ஊதியமாக வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பதாரர் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான jipmer.edu.in ஐப் பார்வையிட வேண்டும். இதையடுத்து, "Apply on-line to the post of Group B & C – March 2022" என்ற இணைப்பிற்கு செல்லவும். பின்னர், விளம்பரம் மற்றும் வழிமுறைகளை கவனமாக படித்து தேவையான விவரங்களை நிரப்பவும். இதை தொடர்ந்து தேவையான ஆவணங்களை இணைத்து "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்யவும். இல்லையெனில் விண்ணப்பதாரர் இங்கே கிளிக் செய்வதன் மூலமும் இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பை பெறமுடியும்.
Comments
Post a Comment