மார்ச்.27 முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி... கொரோனா குறைந்ததால் தடை நீக்கம்!!


மார்ச்.27 முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி... கொரோனா குறைந்ததால் தடை நீக்கம்!!


இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கிய இந்த வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டதோடு உயிரிழப்புகள் அதிகரித்தது. இதன் காரணமாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கடைகள், சுற்றுளாதளங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

 

இதனிடையே வெளி நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. கொரோனா சற்று குறைந்த நிலையில் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் அறிவிக்கப்பட்டது. அப்போது ஒமைக்ரான் என்னும் உருமாறிய வைரஸ் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தியது.

 

இதன் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை, மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதை அடுத்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை பிப்ரவரி 28 ஆம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து விமானச் சேவையைத் தொடங்கலாம் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் தெளிவுபடுத்தி உள்ளது. இதன் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM