12th Man Twitter Review: மோகன்லால், ஜீத்து ஜோஷப் த்ரிஷ்யம் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தினார்களா?
12th Man Twitter Review: மோகன்லால், ஜீத்து ஜோஷப் த்ரிஷ்யம் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தினார்களா?
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது 12த் மேன். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், அனுஸ்ரீ, சைஜு குரூப், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரே ஒரு அறைக்குள் நடத்தப் படும் கோர்ட் ரூம் டிராமா போல அமைந்திருக்கும் இந்த கிரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் படம் திரைக்கதை, மேக்கிங் மற்றும் மோகன்லாலின் நடிப்புக்காக பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
மோகன்லால் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்குத் தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். குட் சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்த 12த் மேன் உள்ளது என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணி மீண்டும் ஏமாற்றாமல், சூப்பர் ஹிட்டான ஒரு படத்தை கொடுத்துள்ளனர். மிஸ்டரி த்ரில்லர், ஸ்க்ரிப்ட், பிஜிஎம், எடிட்டிங், மோகன்லால் மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிரட்டல் என்றும் 5க்கு 4 மதிப்பெண்கள் கொடுக்கலாம், வொர்த் வாட்ச் என இந்த ரசிகர் பாராட்டி உள்ளார்.
திரைக்கதை, நடிப்பு எல்லாம் சூப்பராக இருந்தாலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் லேக் அடிப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக மாறி உள்ளது. மேலும், கிளைமேக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் இருந்தாலும், அது பெரிய பாதிப்பை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
12த் மேன் திரைப்படம் வித்தியாசமான படமாக இன்னொரு ஹிட் படமாகவே உள்ளது. ஆனாலும், த்ரிஷ்யம் படத்தின் மேஜிக் இந்த படத்தில் இல்லை என ரசிகர்கள் பலரும் தங்களது லேசான அதிருப்தியையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தியேட்டரில் வெளியிடாமல் தொடர்ந்து ஜீத்து ஜோசப் மோகன்லால் படங்கள் ஏன் ஓடிடியில் வெளியாகின்றன என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.
Comments
Post a Comment