VJ Chithra:விஜே சித்ராவின் கணவர் ஹேமந்தால் கர்ப்பமாகி.. கலைத்த பிரபல தொகுப்பாளினி... சீரியல் நடிகை பகீர்!
VJ Chithra:விஜே சித்ராவின் கணவர் ஹேமந்தால் கர்ப்பமாகி.. கலைத்த பிரபல தொகுப்பாளினி... சீரியல் நடிகை பகீர்!
மறைந்த விஜே சித்ராவின் கணவர் ஹேமந்தால் பிரபல தொகுப்பாளினி கர்ப்பமாகி அபார்ஷன் செய்த தகவலை கூறியுள்ளார் ரேகா நாயர்.
கைதான ஹேமந்த்
விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை... பக்கவாக கல்லாய் கட்டிய பிரபல இயக்குநர்!
சிக்கிக்கொண்ட சித்ரா
ஆனால் சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் திருமணமே நடக்கவில்லை போலியான சான்றிதழ்களை கொடுத்து பதிவு செய்து விட்டார் என சித்ராவின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதே நேரத்தில் சித்ராவின் அந்தரங்க ரகசியங்கள் வெளியே தெரியாமல் இருக்க சித்ரா விருப்பம் இல்லாமல் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை... பக்கவாக கல்லாய் கட்டிய பிரபல இயக்குநர்!
சித்ராவுக்கு முன்பே
இதனால் சித்ராவும் ஹேமந்தும் உண்மையிலேயே கணவன் மனைவிதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஹேமந்த் பல பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தியுள்ளதாக சீரியல் நடிகை ரேகா நாயர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ரேகா நாயர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஹேமந்துக்கு சித்ராவுடன் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார்.
VJ Chithra: அவங்க வாயை திறந்தாலே போதும்... விஜே சித்ரா பத்தின எல்லா உண்மையும் தெரிஞ்சிடும்!
ஹேமந்த்தால் கர்ப்பம்
ஹேமந்தால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளதாகவும், பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் ஹேமந்துக்கு உண்டு என்றும் கூறியுள்ளார். மேலும் ஹேமந்துடன் நெருக்கமாக பழகிய பிரபல தொகுப்பாளினி ஒருவர், அவரால் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார் ரேகா நாயர்.
அதிர்ச்சி...ஜெயலலிதா கையால் தங்கச் சங்கிலி பரிசு பெற்ற பிரபல பாடகி திடீர் மரணம்!
கருவை கலைத்து
கர்ப்பமான செய்தியை கூறி திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த தொகுப்பாளினி கூறிய போது, தான் காரணமல்ல திருமணம் எல்லாம் செய்து கொள்ள முடியாது என ஹேமந்த் மிரட்டியதாகவும் சீரியல் நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். இதனால் தனது வயிற்றில் வளர்ந்த ஹேமந்தின் கருவை கலைத்த அந்த தொகுப்பாளினி தற்போது வரை ஏமாற்றப்பட்டதை நினைத்து கதறி வருவதாகவும் கூறியுள்ளார்.
அடிக்கடி உல்லாசம்
மேலும் இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்தே ஹேமந்தை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார் விஜே சித்ரா என்றும் அதுதான் அவரது வாழ்க்கை முடிய காரணமாக அமைந்ததாகவும் கூறியுள்ளார் ரேகா நாயர். சித்ரா மரணத்திற்கு பிறகும் தனக்கு தெரிந்து 11 பெண்களுடன் ஹேமந்த் அடிக்கடி உல்லாசமாக இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Comments
Post a Comment