அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் திடீர் விசிட்.. காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி
அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் திடீர் விசிட்.. காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி
அண்மை நாட்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளுக்கு முறையான சகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என தொடர் புகார்கள் எழுந்து வந்தன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அவசர சகிச்சை பிரிவு, மகப்பேறு சகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையை உறுதி செய்தார்.
அப்போது, உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் சகிச்சை அளிக்கப்படும் முறைகள், படுக்கைகள், மருத்துவ உபகரண தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் நோயாளிகளை கனிவுடன் கவனிக்கவும், அவர்களுக்கு திருப்திகரமான சகிச்சைகள் மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் சகிச்சையை விட ஒரு மடங்கு மேலாக சகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
Must Read : பேரறிவாளன் விடுதலை ஆவதற்கு காரணமாக இருந்தவர் மு.க.ஸ்டாலின் தான் - அமைச்சர் பொன்முடி
திடீரென நள்ளிரவில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டதால் மருத்துவர்கள் பதட்டம் அடைந்ததோடு, மருத்துவமனை வளாகமே சற்று நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
செய்தியாளர் - சந்திரசேகர், காஞ்சிபுரம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment