நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி... வைரலாகும் போஸ்டர்கள்
நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி... வைரலாகும் போஸ்டர்கள்
பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்ட்டிக்கள்15’ என்ற திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த படத்தில், தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்தார். பின்னர், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் உள்ளிட்ட படக் குழுவினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த திரைப்படம் இன்று (மே-20) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் உற்சாகத்தோடு படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள பிரியா திரையரங்கில் இன்று உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், திமுகவை சேர்ந்த தற்போதைய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் இன்று மாலை 6.30 காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்துள்ளார். இந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் இளைஞர்களுக்கும் கட்சி பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்கு உள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்படி, டிக்கெட் தேவைக்கு கைப்பேசி எண்ணுடன் போஸ்டர்கள் அடித்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதேபோல, சில தினங்களுக்கு முன்னர், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக இப்படத்தினை காட்சிப்படுத்த இலவச டிக்கெட் கொடுக்க உள்ளதாக கூறி மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் எஸ்.பாலா சோஷியல் மீடியாவில் அறிவிப்பு ஒன்றை வெளியிடிருந்தார்.
Must Read : திமுகவுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை.. மாநிலத்தின் உரிமைகளை காக்க போராடுகிறோம்.. - திருச்சி சிவா
அதில், ‘இளைய சூரியன் நடிப்பில் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி மே 20-ஆம தேதி, மதுரை சோலைமலை திரையரங்கில், கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்களுக்கு இலவசமாக திரையிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். மதுரையில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்கள்சமூக வலைதளங்களில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment