மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி.. திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள்


மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி.. திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள்


சிவங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில்  ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான 12 ஓவருக்கான வீல் சேர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.  தூத்துக்குடி அணியும் சிவகங்கை அணிக்கும் இடையே போட்டி நடந்து முதலில் பேட்டிங் செய்த சிவகங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 53 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தூத்துக்குடி அணி 5.1ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 54ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் பங்கேற்றனர்.

வீல்சேரில் அமர்ந்தவாறு வீரர்கள் பேட்டிங்,  பௌலிங் செய்தது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. போட்டி முடிந்ததும் சிவகங்கை மாவட்ட வீல்சேர் கிரிக்கெட் அணி அமைப்பாளர் பேசுகையில்,  இதில் விளையாடக்கூடிய பெரும்பாலான வீரர்கள் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபரை வெட்டிய கணவன்.. தடுக்க வந்த தந்தைக்கு கை துண்டானது


தங்களுக்கு இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட பயன்படுத்தக்கூடிய முறையான வீழ்சேர் இல்லை என்றும் தங்களின் திறமையை வெளிக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் இதற்காக  உதவி செய்து கிரிக்கெட் விளையாடுவதற்கான முறையான வீழ் சேர்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள்  கோரிக்கை  வைத்தனர்.

செய்தியாளார்: சிதம்பரம்- சிவகங்கை

Comments