"கேஸ் சிலிண்டர் மானியம்... அனைவருக்கும் பலன் பயனளிக்காது!" ராமதாஸ் சாடல்! தமிழக அரசு மீதும் அட்டாக்


"கேஸ் சிலிண்டர் மானியம்... அனைவருக்கும் பலன் பயனளிக்காது!" ராமதாஸ் சாடல்! தமிழக அரசு மீதும் அட்டாக்


Chennai

oi-Vigneshkumar

சென்னை: உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் இணைப்புகளைப் பெற்றவர்களுக்கு ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட உயர்ந்தது.

15 பேர் படுகொலை- தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு 15 பேர் படுகொலை- தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு

இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்வதாகவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தே நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை இருக்கும் என்று பாஜக தலைவர்கள் முதலில் கூறினர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றைய தினம் பெட்ரோல், டீசல் குறைப்பதாகவும் சிலிண்டருக்கு மானியம் தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

விலை குறைப்பு

அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் இணைப்புகளைப் பெற்றவர்களுக்கு ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த விலை குறைப்பும் மானியமும் போதாது என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பயனளிக்காது

இந்நிலையில், இது தொடர்பாக பாஜக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெட்ரோல் மீது ரூ.8, டீசல் மீது ரூ.6 கலால் வரியை வரியை மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.200 மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்களில் மூன்றில் இரு பங்கினருக்கு பயனளிக்காது!

மணியத்தை நீட்டிக்க வேண்டும்

சமையல் எரிவாயு மானியம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவர்கள் எண்ணிக்கை 9 கோடி மட்டுமே. மொத்தமுள்ள 30 கோடி எரிவாயு இணைப்புகளில் 22 கோடி இணைப்புகளுக்கு இந்த மானியம் கிடைக்காது! வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மட்டுமின்றி, ஏழை & நடுத்தர மக்களாலும் எரிவாயு விலை உயர்வை தாங்க முடியாது. அந்த குடும்பங்களுக்கும் எரிவாயு மானியத்தை நீட்டிப்பதால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆகும் செலவு அதிகமாக இருக்காது. அதனால், எரிவாயு மானியத்தை நீட்டிக்க வேண்டும்!

தமிழக அரசின் கடமை

மத்திய அரசு இரு தவணைகளாக எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டிய கடமை உண்டு. அதனால், மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைத்து மக்களின் சுமையை போக்க முன்வர வேண்டும்!" என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

Comments

Read more about:

பாமக ராமதாஸ் சிலிண்டர் பெட்ரோல் டீசல் pmk ramadoss cylinder petrol diesel politics

English summary

Ramadoss asks Tamilnadu govt to reduce VAT on Petrol, diesel as Central govt reduces the tax: (மத்திய அரசின் கேஸ் சிலிண்டர் விலை குறித்து பாமக ராமதாஸ்) Central govt announced tax deduction on petrol-diesel and gas cylinder Subsidy.

Story first published: Sunday, May 22, 2022, 11:42 [IST]

Other articles published on May 22, 2022

Comments