“விக்ரம்” படத்தில் ஆண்டவரின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன லோகேஷ் கனகராஜ்.! இயக்குனர் மேடையில் புகழாரம்.
“விக்ரம்” படத்தில் ஆண்டவரின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன லோகேஷ் கனகராஜ்.! இயக்குனர் மேடையில் புகழாரம்.
உலக நாயகன் கமலஹாசன் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த கூடிய ஒரு நடிகர் என்பது நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல் தான் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படமும் கமலுக்கு நல்ல தீனி கொடுக்கும் வகையில் செம கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இதில் கமலின் நடிப்பு வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது இந்த படத்தில் இருந்து இதுவரை பத்தல பத்தல பாடல், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் குறித்தும் படம் குறித்தும் கமல் அடுத்ததாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் இசை வெளியீட்டு விழா மேடையில் ஒரு ஆச்சரியமான விஷயத்தை தெரிவித்திருந்தார் அதாவது விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருந்தபோது லோகேஷ் கனகராஜ் கமலிடம் ஒரு காட்சிக்காக ஆம்ஸ் தெரிய வேண்டும் என கூறி இருந்தாராம்.
அதற்காக கமல் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கை பகுதியில் கொஞ்சம் தூக்கிவிட சொல்லியிருந்தார் அதற்கு உடனே கமல் இதோ வந்து விடுகிறேன் என கூறிவிட்டு புஷ்-அப் செய்துள்ளார். இருபத்தி ஆறு முறை புஷ்-அப் செய்து அந்தக் காட்சிக்காக தயாராக இருந்தார்.
அதை பார்த்துக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் க்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது ஏனென்றால் அந்த காட்சியை இரவு இரண்டு மணிக்கு படமாக்கி கொண்டிருந்தனர். இந்த வயதில் நடிப்பில் இவ்வளவு ஆர்வம் கொண்ட அவருக்கு முன்னால் இளைஞர்கள் ஒன்றுமில்லை என்று அவர் ஆண்டவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் கமல் அந்த கேரக்டராகவே மாறி விடுவது தான் அவரது ஸ்பெஷல். அவரது கடமை உணர்வு பலருக்கும் ஆச்சரியத்தை இன்றளவும் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறதாம்.
Comments
Post a Comment