பகீர்! இரயில் இன்ஞின் மீதேறிய இளைஞர் மீது மின்சாரம்! பரபரப்பு காட்சிகள்!2024271078
பகீர்! இரயில் இன்ஞின் மீதேறிய இளைஞர் மீது மின்சாரம்! பரபரப்பு காட்சிகள்!
இரயில் என்ஜின் மீதேறி கொடியசைத்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பனிப்புலான்வயல் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (20). இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு நேற்று நண்பர்களுடன் அஞ்சலி செலுத்த சென்றார். அவருடன் தேவகோட்டையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்ற ரயிலில் ஏறி பரமக்குடி வந்தனர்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய முகேஷ் திடீரென ரயில் என்ஜினின் முன்பகுதியில் ஏறினார். பின்னர் அவர் கையில் வைத்திருந்த கொடியை தூக்கிப்பிடித்து கோஷம் எழுப்பினார்.
அப்போது முகேசின் கையில் இருந்த கொடியின் இரும்பு கம்பியானது, ரயிலுக்கான உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதனால் கம்பி வழியாக முகேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அவருடன் வந்திருந்தவர்கள் அலறினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முகேசை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments
Post a Comment