\'பீஸ்ட்\' படத்திற்காக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
\'பீஸ்ட்\' படத்திற்காக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக முதல் ஐந்து நாட்களுக்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள புதுவை அரசு அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே புதுவை முதல்வர் ரெங்கசாமி மற்றும் விஜய் ஆகிய இருவரும் அவ்வப்போது சந்தித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் ரிலீஸுக்காக புதுவையில் விஜய் மற்றும் முதல்வர் ரெங்கசாமி இணைந்த கட்-அவுட்டுக்களும் அமைக்கப்பட்டு புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் புதுவையில் ’பீஸ்ட்’ படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடவும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ளவும் புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி குறைந்த டிக்கெட் விலை ரூபாய் 150 என்றும் அதிகமான டிக்கெட் விலை ரூபாய் 260 என்றும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments
Post a Comment