IPL 2022- நிச்சயமா அந்த டீம் ப்ளே ஆஃப் சுற்றுக்கே போகாது - ரெய்னா கணிப்பு


IPL 2022- நிச்சயமா அந்த டீம் ப்ளே ஆஃப் சுற்றுக்கே போகாது - ரெய்னா கணிப்பு


சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்காமல் புறந்தள்ளியது, மற்ற அணிகளும் அவரை எடுக்கவில்லை. 40 வயது தோனி ஆடுவார், ஆனால் ரெய்னா இல்லையா என்று ரசிகர்கள் அவருக்காக வருந்தினர்.  தோனி தல என்றால் ரெய்னா சின்ன தல என்றும் மிஸ்டர் ஐபிஎல் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.

காரணம் அவர் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்கள் அடித்த முதல் வீரர். ஐபில் தொடரில் 107 கேட்ச்கள் பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். ரெய்னா புறக்கணிக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் கண்டிப்பாக அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் ஐபிஎல்லுக்குத் திரும்புவார் எனும் நம்பிக்கையுடனேயே உள்ளனர்.

உள்ளூர் போட்டிகளில் அவர் மீண்டும் தன்னை நிரூபித்தால் அடுத்த ஐபிஎல் தொடரில் கூட ஆடலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர், என்ன கொடுமை இது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் ஆடமால் என்பது போய் தனியார் அஜா குஜா ஐபிஎல் தொடருக்கு தேர்வாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ள்து.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்படும் சுரேஷ் ரெய்னா கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லா அணிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பான அணிதான் எனத் தெரிவித்த அவர், அதேநேரம், இம்முறை பெங்களூர், சென்னை, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள்தான் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதில் அவர் லக்னோவைச் சேர்த்து மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட மற்ற 6 அணிகளுள் எதுவும் இம்முறை ப்ளே ஆப் செல்லாது எனவும் அவர் கணித்துள்ளார். அனுபவ வீரரான ரெய்னாவின் இக்கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுவருகிறது.

லக்னோ அணி பிளே ஆஃப் செல்லும் மும்பை இந்தியன்ஸ் செல்லாது என்பது கொஞ்சம் டூ மச் தான், கே.எல்.ராகுல் கேப்டனாக ஒரு தோல்வியடைந்த நபர் ஆவார். இது தெரியாமல் அவரைப் போய் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவார் என்றால் நம்பவா முடிகிறது? முடிந்தால் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிஎஸ்கே அணியுடன் மோடி வெல்லட்டும் பிறகு பார்ப்போம்.

Comments