ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு


ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு


பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, 'டெட்' ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு வரும், 14ம் தேதி துவங்க உள்ளது.பட்டப் படிப்புடன் பி.எட்., முடிக்கும் பட்டதாரிகள், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற, தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

இந்த தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால், அது வாழ்நாள் முழுதும் செல்லத்தக்க சான்றிதழாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான டெட் தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இரவு வெளியிட்டது. தேர்வு தேதியை வெளியிடும் முன், விண்ணப்ப பதிவு தேதி மட்டும் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, வரும், 14ம் தேதி ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், ஏப்ரல் 13 மாலை 5:00 மணி வரை விண்ணப்ப பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போன்றவற்றை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM