நள்ளிரவில் பெண்ணுக்கு கத்திக்குத்து... கள்ளக்காதலன் வெறிச்செயல்..
நள்ளிரவில் பெண்ணுக்கு கத்திக்குத்து... கள்ளக்காதலன் வெறிச்செயல்..
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமாா் இவா் சென்னை ஸ்ரீ பெரும்பத்தூா் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிகிறாா். இவருடைய மனைவி காமாட்சி (34) இவா்களுக்கு 10 மற்றும் 13 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனா். இவா்கள் குடும்பத்துடன் பாணாவரம் மாலைமேடு சாலையில் பைரவ காலனி அருகே வீடு வாடகை எடுத்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் காமாட்சிக்கும் பாணாவரம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் கட்டிட தொழிலாளி ஜெயபிரகாஷ் (38) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இருந்த தகாத உறவு முறிந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. ஜெயபிரகாஷ்க்கு அம்மு என்ற மனைவியும் 13-வயதில் ஒரு மகனும் 10-வயதில் ஒரு மகன் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனா்.
இதனிடையே நேற்று இரவு காமாட்சியின் கணவா் பணிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதை அறிந்த ஜெயபிரகாஷ் நள்ளிரவு காமாட்சி வீட்டுக்கு சென்றுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்தாக கூறப்படுகின்றது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ் வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியால் காமாட்சியின் வயிற்றில் ஓங்கி குத்தியுள்ளார்.
ALSO READ | தினேஷ் கார்த்திக்கும், மோர்கனும் குல்தீப் யாதவ்வை ஒழித்தார்கள்- மொகமட் கைஃப் கடும் சாடல்
இதில் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டு வெளியே ஓடிவந்தவரை மீண்டும் கழுத்து பகுதியில் கத்தியால் அறுத்துள்ளார் பின்னர் இதில் காமாட்சி ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளாா். இதனிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காமாட்சியை வாலாஜபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்
மேலும் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.இந்நிலையில் இச்சம்பவம் அறிந்த பாணாவரம் காவல் துறையினா் தப்பி தலைமறைவாக இருந்த ஜெயபிரகாஷ் என்பவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனா்.
பாணவரம் அருகே கள்ளத்தொடர்பு காரணமாக கணவர் மனைவியை நள்ளிரவில் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : க.சிவா
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment