இன்று சிஎஸ்கே வென்று விடும் - பட்சி சொல்கிறது- லக்னோவின் கே.எல்.ராகுல் பலவீனமான கேப்டன்


இன்று சிஎஸ்கே வென்று விடும் - பட்சி சொல்கிறது- லக்னோவின் கே.எல்.ராகுல் பலவீனமான கேப்டன்


LSG vs CSK: மேட்ச் முன்னோட்டம் – IPL 2022 மேட்ச் 7, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vsசென்னைசூப்பர் கிங்ஸ். ஐபிஎல் 2022 இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. LSG vs CSK போட்டி மார்ச் 31 (வியாழக்கிழமை) அன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் சென்னை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் மொயீன் அலி வந்து விடுகிறார். முதல் போட்டியில் இரு அணிகளுமே தோற்றிருந்தாலும் சிஎஸ்கே-யின் அனுபவ தோனிக்கு எப்படி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புவது என்று தெரியும் ராகுல் அந்த விஷயத்தில் கொஞ்சம் வீக்.

மேலும் இன்னொரு லாஜிக் என்னவெனில் நேற்று கொல்கத்தா அணி ஆர்சிபியிடம் தோற்று பெங்களூருவுக்கு ஒரு ஓப்பனிங் கொடுத்தது போல் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிஎஸ்கேவுக்கு ஒரு ஓப்பனிங் கொடுக்கும் என்றே ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே தனது சீசன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கிடையில், அறிமுக வீரர்களின் மோதலில், கேஎல் ராகுல் தலைமையிலான எல்எஸ்ஜி, மறுநாள் இரவு ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

LSG vs CSK டெலிகாஸ்ட்-

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி சேனல்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதலை ஒளிபரப்பும்.

LSG vs CSK லைவ் ஸ்ட்ரீமிங்:

இந்த போட்டியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யும்.

LSG vs CSK போட்டி விவரங்கள்:

LSG vs CSK போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மார்ச் 31 வியாழன் அன்று மாலை 7:30 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: கே.எல். ராகுல் (சி), குயின்டன் டி காக் (WK), எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.

சிஎஸ்கே உத்தேச லெவன்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கே), எம்எஸ் தோனி (WK), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM