தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி; நலம் விசாரித்தார் ஸ்டாலின்!


தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி; நலம் விசாரித்தார் ஸ்டாலின்!


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள் உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு தற்போது 89 வயது. வயது முதிர்வு காரணமாக சில உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வரும் தயாளு அம்மாள், வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இன்று தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் உடல் நலப் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM