இளம்பெண் தற்கொலை; விருப்பம் இல்லாத திருமணம் காரணமா?
இளம்பெண் தற்கொலை; விருப்பம் இல்லாத திருமணம் காரணமா?
விருப்பம் இல்லாத திருமணத்தால் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்தாக கூறப்படுகிறது.
சென்னை ஆவடி அடுத்த நந்தவனம்மேட்டூர், காந்தி தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் திருநின்றவூரில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில், கடந்த மே மாதம் மணிகண்டனுக்கும், வேலூரைச் சேர்ந்த நாகேஸ்வரி என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் இருவரும் வசித்து வந்தனர். இதனிடையே நாகேஸ்வரியின் அம்மா செண்பகவல்லி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, நாகேஸ்வரி, அவரை கவனிக்க திருமணமான பத்தே நாளில் வேலூருக்கு சென்று விட்டார்.
இதன் பிறகு, கடந்த 17-ம் தேதி மணிகண்டன், நாகேஸ்வரி ஆகிய இருவரும் ஆவடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். பின்னர், நேற்று காலை மணிகண்டன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு வீட்டின் உரிமையாளர் காயத்ரி என்பவர் மணிகண்டன் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டில் நாகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த அவர் மணிகண்டனுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதன்பிறகு, ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முதற்கட்ட விசாரணையில், நாகேஸ்வரி திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து உள்ளார். இதற்கிடையில், பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த நாகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், நாகேஸ்வரிக்கு திருமணமாகி இரண்டே மாதங்களே ஆகியுள்ளதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெறுகிறது.
Comments
Post a Comment