தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டம் மயிலாடுதுறை
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டம் மயிலாடுதுறை
தமிழ்நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டம் என்ற தகுதியை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனோ தொற்று பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில், ஒருசில மாவட்டங்களில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என வந்த போதும், பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மட்டும் இதுநாள் வரை எந்த மாவட்டத்திலும் பூஜ்ஜியத்தை தொடவில்லை.
இந்நிலையில், முற்றிலும் கொரோனா பாதிப்பு இல்லாத தமிழகத்தின் முதல் மாவட்டம் என்ற அந்தஸ்தை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து பூஜ்ஜியம் என்றிருந்த நிலையில் சிகிச்சை பெற்ற அனைவரும் வீடு திரும்பியுள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ் பூஜ்ஜியமாக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 26,496 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
Comments
Post a Comment