மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை!


மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை!


உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (22). ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோகண்டி பகுதியில் மனைவியுடன் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கிருஷ்ணா செல்போனில் அதிக நேரம் பேசியுள்ளார். இதை பூஜா கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே  வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணா, மனைவி கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டுகொண்டார். திரும்பி வந்த பூஜா, கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். 

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, கிருஷ்ணாவை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா பரிதாபமாக இறந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.!

இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கடைசி பந்துவரை தோனி விளையாடினால் வெற்றி உறுதி: சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா நம்பிக்கை