இனி ரசீது கட்டாயம்!! டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!!
இனி ரசீது கட்டாயம்!! டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!!
தமிழகத்தில் மதுபானங்களை டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே ஏற்று நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், ரசீது தரப்படுவதில்லை எனவும் தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதன் அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகங்களுக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து சில்லறை விற்பனை கடைகளுக்கும் டாஸ்மாக் மேலாண்மை இயக்கம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி
விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், தினசரி சட்டா, சரக்கு இருப்பு மற்றும் விற்பனை குறித்த 21 வகையான பதிவேடுகளை முறையாக தினமும் அப்டேட் செய்ய வேண்டும்.திடீர் ஆய்வுகள் மூலம் இவை பரிசோதிக்கப்படும். அப்போது ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு ரசீது கட்டாயம். ரசீதில் மதுபானத்தின் பெயர், அளவு, அரசு நிர்ணயித்த விலை மற்றும் கடை ஊழியர்களின் கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். மதுபானங்களின் விலைப்பட்டியல் பெயர்பலகை வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும்' என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment