5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது யார்? – இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள்!
5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது யார்? – இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள்!
உபி,பஞ்சாப்,கோவா,மணிப்பூர்,உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.அதைப்போல, உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில்,உத்தர பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டில் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.
அதன்படி,இன்று வெளியாகும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஜூலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்,2024 மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment