குடிகார நடிகர் மதுவை கைவிட்டதால் முதல் அமைச்சரானார்..! மாதம் 1000 ரூபாய் கொடுத்துருங்க..!


குடிகார நடிகர் மதுவை கைவிட்டதால் முதல் அமைச்சரானார்..! மாதம் 1000 ரூபாய் கொடுத்துருங்க..!


பஞ்சாபில் கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போதைக்கு அடிமையானவர் என்று விமர்சிக்கப்பட்ட காமெடி நடிகர் பக்வந்த் மான், போதையை கைவிட்டதால் இந்த முறை மகத்தான வெற்றி பெற்று பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆம் ஆத்மி வெற்றியின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

10 வருடங்களுக்கு முன்பு வரை பஞ்சாப் தொலைக்காட்சிகளில் நம்ம ஊர் சிவகார்த்திகேயன் போல காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் பக்வந்த்மான்..!

இவரது காமெடியில் சமூக பொறுப்புடன் கூடிய கருத்துக்கள் இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்களை கவர்ந்தார் பக்வந்த்மான், ஊழலுக்கு எதிராக மக்கள் கட்சி என்று ஒன்றை தொடங்கி முதல் தேர்தலை சந்தித்த பக்வந்த்மானுக்கு தோல்விதான் பரிசாகக் கிடைத்தது.

அதன் பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பக்வந்த்மான், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளை எதிர்த்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதன் பயனாக அவர் உள்பட 4 பேர் அப்போது மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மக்களவையில் தனது கருத்தான பேச்சால் மாநிலம் முழுவதும் பிரபலமான போதைப்பிரியர் என்பது அவருக்கு மிகப்பெரிய பலவீனமாக இருந்தது. ஒருமுறை மது போதையுடன் சீக்கிய குருக்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் விரட்டப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பக்வந்த்மானை முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி ஆம் ஆத்மி களம் கண்ட நிலையில், அவர் மகா குடிக்காரர் என்று சில வீடியோக்கள் நாடு முழுவதும் பகிரப்பட்டதால் அவர் சென்றாலும் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்ற இயலாமல் போனது. மேலும் பக்வந்த்மான் மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் குடி குடியைக் கெடுத்து விட்டதை தாமதமாக உணர்ந்த பக்வந்த்மான், அதில் இருந்து விடுபட்டு தெளிவான சிந்தனையுடன் செயல்பட ஆரம்பத்தார். இந்த முறை யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது ? என்பதை செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப கோரி, பஞ்சாப் மக்களிடையே ஆம் ஆத்மி பகிரங்கமாக வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்தியது. பெரும்பான்மையான மக்கள், போதையில் இருந்து மீண்ட பக்வந்த்மான் பெயரையே தேர்வு செய்ததால் அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தது ஆம் ஆத்மி.

தேர்தல் வாக்குறுதிகளாக 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம், மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அளிக்கப்படும், உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இடம் பெற்று இருந்தன.

ஆனால் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் இருக்கும் பஞ்சாப் அரசால் எப்படி இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலும் என்று காங்கிரசும் , பா.ஜ.கவும் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மியின் பக்வந்த்மானுக்கு தங்களில் மகத்தான ஆதரவை அள்ளிக்கொடுத்து அவரை முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

வழக்கமாக ஆளுனர் மாளிகையில் நடை பெற்றுவந்த முதல் அமைச்சர் பதவியேற்பு விழா இந்த முறை சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரில் வைத்து நடை பெற இருப்பதாக கூறி உள்ள பக்வந்த்மான், அங்கு வைத்து தான் முதல் அமைச்சராக பதவி ஏற்றுக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

சொந்த வாழ்க்கையில் போதையில் இருந்து மீண்டது போல, பஞ்சாப்பை கடனில் இருந்து மீட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே அம்மாநில மக்களின் எதிர்பார்ப்பு..!

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM