``என் மனைவி மரணத்தில் மாஜி அமைச்சருக்குத் தொடர்பிருக்கிறது!" - நடிகை சித்ரா கணவர் போலீஸில் புகார்
கடந்த 2020-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ராவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவரின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், ஹேம்நாத் கடந்த 25-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், ``என் மனைவி சித்ரா இறந்ததும் நானும் இறந்துவிடலாம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment