கேரளாவுக்கு கடத்தப்படும் காட்டுமாடு இறைச்சி; அத்துமீறும் வேட்டைக் கும்பல்! - என்ன நடக்கிறது?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி வனப்பகுதிகளில் காட்டுமாடுகளை இறைச்சிக்காக ஒரு கும்பல் தொடர்ந்து வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்த வனத்துறை அதிகாரிகள் இரவோடு இரவாக தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ஓவேலி வனச்சரகத்திற்கு உட்பட்ட சூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காட்டுமாட்டின் 4 கால்கள், கொம்பு, தோல் போன்றவை மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அழுகிய நிலையில் இருந்த காட்டுமாட்டின் உடல்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment