குண்டக்க மண்டக்க டைரக்டர் மரணம்707127668
குண்டக்க மண்டக்க டைரக்டர் மரணம் குண்டக்க மண்டக்க படத்தின் இயக்குனர் அசோகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64. தமிழச்சி, பொன்விழா, பார்த்திபன், வடிவேலு நடித்த குண்டக்க மண்டக்க உள்ளிட்ட படங்களுக்குக் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் எஸ்.அசோகன். சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்தார். வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுமுன்தினம் இரவு காலமானார். அவரது சொந்த ஊரான மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிசடங்கு நடைபெற்றது. அசோகனுக்கு மனைவி ராஜலட்சுமி, மகன் பகவத் கீதன் உள்ளனர்.